முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டணத்தை ஏற்காத தனியார் பள்ளிகளை அரசே நடத்த வலியுறுத்தல்

புதன்கிழமை, 4 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.4​- அரசு நிர்ணயிட்டு கல்வி கட்டணத்தை ஏற்க மறுக்கும் தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுயுள்ளதாவது:-​

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​ தமிழக அரசால் அமைக்கப்பட்ட nullநீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கல்விக்கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும் வரை பள்ளிகளை திறக்கமாட்டோம் என்றும், சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால் அக்கல்வி முறையை நடப்பாண்டில் நடைமுறைபடுத்தமாட்டோம் என்றும் தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. இது அரசுக்கு சவால் விடுக்கும் செயலாகும். அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தின் முதல் கட்டமாகத் தமிழக அரசு சமச்சீர் கல்வியையும், மத்திய அரசு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளன. சமச்சீர் கல்வியில் சில குறைபாடுகள் இருக்கலாம். 

இது காலப்போக்கில் களையப்பட வேண்டும். ஆனால், அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கான முயற்சியில் அரசுக்கு துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்களது விருப்பம் போல கட்டணக் கொள்ளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோருவதும், சமச்சீர் கல்வியை தங்களது விருப்பம் போலத் தான் செயல்படுத்துவோம் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது அனைவருக்கும் தரமானகல்வி வழங்கும் முயற்சி என்ற கற்பக மரக்கன்றை வளர்ப்பதற்காக தண்ணீர் ஊற்றுவதற்கு பதில், வெந்nullர் ஊற்றி அழிக்கும் செயல். தனியார் பள்ளிகளின் இந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. 

ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் மாநில அரசு செய்யவேண்டும். கட்டண உயர்வு கோரி மேல்முறையீடு செய்துள்ள 6,400 பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை nullநீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு உடனடியாக வெளியிட வேண்டும். 

அக்கட்டணம் ஏழைகளாலும் செலுத்தப்பட வேண்டிய அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு பிறகும் தனியார் பள்ளிகள் வழிக்கு வரவில்லையென்றால் அவற்றுக்கு அரசின் நிதி உதவியை வழங்கி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி தர வேண்டும். இல்லாவிட்டால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற் கான நடவடிக்கைகளை புதிய அரசு தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்