முஷாரஃப் மீது தேசத்துரோக வழக்கு: பாக். உச்ச நீதிமன்றம்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை.5 - பாகிஸ்தான்  முன்னாள் அதிபர்  பர்வேஸ்  முஷாரஃப் மீது தேசத்துரோக  வழக்கைப் பதிவு  செய்து  விசாரணை  நடத்துமாறு  உச்சநீதிமன்றம்,  பாகிஸ்தான் அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில்  கடந்த 1999 இல் பிரதமராக  இருந்த  நவாஸ் ஷெரீபின்  ஆட்சியைக் கவிழ்த்து விட்டு,  முஷாரஃப்  அதிபராகப் 

பொறுப்பேற்றார். அப்போது அவர்  அந்நாட்டு   உச்ச நீதிமன்ற   நீதிபதிகளைப் பதவி நீக்கியதுடன், அவர்களைக் கைது செய்து காவலில்  வைத்தார். அரசமைப்புச்  சட்டத்தையும்  ரத்து செய்தார்.  2008 ஆம் ஆண்டு  வரை அதிபர்  பதவியில்  நீடித்த   முஷாரஃப், பின்னர் வெளிநாட்டில்  தஞ்சம் புகுந்தார்.  சில மாதங்களுக்கு முன்  பாகிஸ்தான்  திரும்பிய  அவர் மீது  பல்வேறு வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன.  அவர் இப்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தை   சீர்குலைத்த  முஷாரஃப் மீது தேசத்துரோக  வழக்கைப் பதிவு செய்யுமாறு  உத்தரவிடக் கோரி  பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்ட மனுக்கள் மீது புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.  முஷாரஃப் மீது தேசத்துரோக வழக்கைப் பதிவு செய்து உடனடியாக  விசாரணையைத் தொடங்குமாறு  மூத்த நீதிபதி  ஜாவித் கவாஜா  தலைமையிலான அமர்வு, பாகிஸ்தான்  அரசுக்கு உத்தரவிட்டது.  இவ்வழக்கில்  சிக்கியவர்கள்  மீதான  குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு  அதிகபட்சமாக  மரண தண்டனை  விதிக்கப்படுவதற்கும்  வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: