ஈராக்கில் கார் குண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
IraqBlast

சமாரா,பிப்.23 - ஈராக்கில் உள்ள சமாரா நகரில் போலீஸ் அலுவலகத்துக்கு எதிராக நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். மத்திய ஈராக்கில் உள்ள சமாரா நகரில் அமைந்துள்ளது ஈராக் போலீசாரின் அவசர உதவிப்பிரிவு. இதன் அலுவலகத்தை நோக்கி வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை வேகமாக ஓட்டி வந்த பயங்கரவாதி சுற்றுச்சுவரில் மோதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். ஈராக் போலீசாரின் அவசர உதவிப் பிரிவு சென்ற ஜனவரி மாதம் இங்கு அமைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: