முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்துக்கு ரஷ்ய அதிபர் புட்டீன் கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ,ஜூலை.9 - சிரியாவில் ஏற்பட்டுள்ளதைப்போல எகிப்திலும் உள்நாட்டு போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் புட்டீன் கடுமையாக எச்சரித்துள்ளார். 

அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதை அடுக்க அந்த நாட்டு மன்னர் ராணுவத்தை ஏவிவிட்டார். கடைசியில் அந்த நாட்டில் உள்நாட்டு போர் வெடித்து நாடே சின்னாபின்னமாகிக்கிடக்கிறது. அதேமாதிரி எகிப்து அதிபராக இருந்து முபாரக்ஹிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி அவர் அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு பிறகு புதிய அதிபர் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளாகுவதற்குள் மீண்டும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையொட்டி தற்போது எகிப்து நாட்டு தலைமை நீதிபதி தற்காலிக அதிபராக பதவி ஏற்றுள்ளார். இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் கூறுகையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் மாதிரி எகிப்திலும் உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக எச்சரித்துள்ளார். பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் மோர்சி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் உள்நாட்டு போருக்கு வழிவகுத்துவிடும் என்று புட்டீன் எச்சரித்துள்ளார். அதனால் மோதலை கைவிட்டு சமாதானமாக போகும்மாறு எகிப்து மக்களை புட்டீன் கேட்டுக்கொண்டுள்ளார். எகிப்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் புட்டீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்