முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்த கயா குண்டுவெடிப்பு: ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கயா,  ஜூலை. 10 - பயங்கரவாதத்தை ஒடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறி விட்டதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தில் புனித நகரமாம் புத்த கயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் கடந்த ஞாயிறன்று 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இருந்தாலும் இந்த குண்டுகள் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகளாக இருந்த காரணத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆயினும் இந்த சம்பவத்தில் 2 துறவிகள் மட்டும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒரு நபரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடைபெற்று வருகிறது. 

இச்சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு சகோதர தீவிரவாதிகள் என்பதும் தெரியவந்துள்ளது. மியான்மரில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்திற்கு பழிக்குப்பழி வாங்கவே இந்த குண்டுவெடிப்பை இவர்கள் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங், எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி ஆகியோர் புத்த கயாவில் உள்ள மகாபோதி ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது கூறிய அவர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்கள். 

ஓட்டு வங்கி அரசியலையும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பையும் காங்கிரஸ் அரசு இணைத்து விட்டது என்று அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறினார். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய புலனாய்வு துறையையும் உளவுத் துறையையும் ஒன்றுக்கு ஒன்று எதிராக செயல்பட வைத்து விட்டது என்று ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டினார். பயங்கரவாத தாக்குதலை தடுக்க ஒருங்கிணைந்த செயல்திட்டம் தேவை என்றும் ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார். பாதுகாப்பு அமைப்புகளும், உளவு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எனவே இது போன்ற தாக்குதல்களை தடுக்க மாநில அரசுகளால் மட்டுமே சாத்தியப்படாது. அதற்கு மத்திய அரசும் ஒருங்கிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார். மகாபோதி ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ராஜ்நாத்சிங்கும், அருண்ஜெட்லியும் கடும் கண்டனம் தெரிவித்தனர். உலகெங்கிலும் உள்ள மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்