அமெரிக்க செனட் சபை தேர்தலில் பாபி ஜிண்டால்?

புதன்கிழமை, 10 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

நியூயார்க், ஜூலை. 11 - அமெரிக்க செனட் சபை தேர்தலில் தாம் போட்டியிட ஆர்வம் காட்டுவதாக வெளியான செய்திகளை லூசியானா மாகாண ஆளுநரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் நிராகரித்துள்ளார். அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் பாபி ஜிண்டால். தற்போது லூசியானா கவர்னராக இருக்கிறார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் செனட் சபை தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வமாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இதை முற்றாக நிராகரித்திருக்கும் பாபி ஜிண்டால், செனட் தேர்தலில் போட்டியிட நான் ஆர்வம் காட்டவில்லை. வேட்பாளராகவும் நான் இருக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: