முதல்வர் சாண்டி பதவி விலகக்கோரி முழுஅடைப்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஜூலை. 11 - கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக கொட்டாரக்கரையை சேர்ந்த பிஜூராதாகிருஷ்ணன், சரிதாநாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இம்மோசடியில் காங்கிரசாருக்கும் தொடர்பு இருப்பதாகவும் இதற்கு பொறுப்பேற்று முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. இதில் வன்முறை வெடித்தது. 

அப்போது போலீசார் நடத்திய தடியடியில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் அவசர கூட்டம் திருவனந்தபுரத்தில் கூடியது. இதில் முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு தொடங்கியது. மாநிலம் முழுவதும் நள்ளிரவு முதலே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாரசாலை, திருவனந்தபுரம் டெப்போக்களில் இருந்து வெளியூர்களுக்கு எந்த பஸ்களும் செல்லவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். 

திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், சங்கனாச்சேரியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடிக் கிடந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்: