முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசங்கர மேனனை நம்பவில்லை: இலங்கைத் தமிழர்கள்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

யாழ்ப்பாணம், ஜூலை.12 - இலங்கையில் நடைபெற்றபோரின்போது, இலங்கை அரசுக்கு  சிவசங்கர மேனன் துணையாக நின்றார். எனவே நாங்கள் சிவசங்கர மேனனை ஒருபோதும் நம்பப்போவதில்லை என்று இலங்கைத் தமிழர்கள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் கொழும்பு சென்றார். அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 13-வது அரசியலமைப்பு சட்டத்தை எந்தவித திருத்தமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்று உறுதியுடன் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

  இவரது வருகைக்கு இலங்கைத் தமிழர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனென்றால் போர் நடக்கும்போது, அவரும், எம்.கே.நாராயணனும் தான் அடிக்கடி கொழும்புக்கு சென்று வந்தார்கள். அந்த நாட்டு அரசுக்கும், ராணுவத்துக்கும் துணையாக நின்றார்கள். 

அப்போது எம்.கே.நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். சிவசங்கரமேனன் வெளியுறவு செயலராக இருந்தார். இப்போது  எம்.கே. நாராயணன் மேற்கு வங்க மாநில கவர்னராக உள்ளார். அவருடைய பதவிக்கு சிவசங்கரமேனன் வந்துள்ளார். ஆகவே அவரை இலங்கைத் தமிழர்கள் நம்புவில்லை. இதுகுறித்து தமிழர்கள் கூறியதாவது:

நாங்கள் எத்தனையோ வெளிநாட்டவரை பார்த்திருக்கிறோம். யாரும் எங்களை காப்பாற்றவில்லை. அவர்களை நம்பி ஏமாந்துதான் போயிருக்கிறோம். எங்கள் போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவின் பிரதிநிதிகளை நாங்கள் மீட்பர்களாகக் கருதவில்லை. ஆகவே மேனனின் வருகை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. சிவசங்கரமேனன் இங்கு வரப்போகிறார் என்ற செய்தி மிகைப்படுத்தப்பட்டு வந்தது. இவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் செயல் என்று அவர்கள் கூறினார்கள்.

வாலிகாமம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கூறுகையில் நாங்கள் எத்தனையோ தூதர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களை தேவ தூதர்களாக நம்பினோம். ஆனால் அவர்கள் எவருமே எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நடக்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்