முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் போலீஸாருடன் மோதல்: 2 தீவிரவாதிகள் பலி

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, ஜூலை.12 - அசாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் நடந்த என்கவுன்டரில் போடோ தீவிரவாதிகள்  2 பேர் உயிரிழந்தனர். போலீஸார் இருவர் காயமடைந்தனர்.  அசாமில் சோனிட்பூர் மாவட்டத்தில் தரபாரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. போடோலேண்ட்  என்ற அமைப்பின் சங்பிஜித் பிரிவைச் சேர்ந்த  தீவிரவாதிகள் 8 பேர் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுன்டரில் தீவிரவாதிகள் 2 பேர் இறந்ததாகவும், மற்றவர்கள்  தப்பி ஓடிவிட்டதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவரும், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்ததாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அரபிந்த கலிதா தெரிவித்தார். 

இறந்தவர்களிடமிருந்து, 2 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர். இறந்தவர்களில் ஒருவர் கோல்பரா மாவட்டத்தைச் சேர்ந்த கவுரங் பசுமட்டரி என்பது தெரிய வந்தது.

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேயிலை தோட்ட அதிபர் அடிலூர் ரஹ்மானை இவர் கொன்றார். இவரை போலீஸார் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது. இறந்த மற்றொருவர் யார் என்று அடையாளம்  தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago