முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டிங் செய்வதில் தோனிக்கு நிகர் ஒருவரும் இல்லை

சனிக்கிழமை, 13 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜூலை. 14 - ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை இக்கட்டான நிலையில் புத்தி சாதுர் யமாக பேட்டிங் செய்வதில் தோனிக்கு நிகர் ஒருவரும் இல்லை என்று முன் னாள் வீரரான திலீப் வெங்க்சர்க்கார் புகழாரம் சூட்டி இருக்கிறார். மே.இ. தீவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர் இறுதிச் சுற்றில் பரப ரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை யை வீழ்த்தி கோப்பையை தனது வச மாக்கியது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 203 ரன்னை எடுத்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்னை எடுத்து அபார வெற்றி பெற்றது. 

இந்தத் தொடரின் முதல் போட்டியின் போது கேப்டன் தோனி காயம் அடைந்தார். இதனால் கோக்லி தற்காலிக கே ப்டனாக நியமிக்கப்பட்டார். தோனி 3 ஆட்டங்களில் ஆட வில்லை. 

இறுதிச் சுற்றில் மீண்டும் களம் இறங்கி ய தோனி தனது அதிரடி ஆட்டத்தால் அசத்தியதுடன் இக்கட்டான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இறுதிவரை க ளத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார். 

பின்வரிசை வீரர்கள் உதவியுடன் தோ னி கடைசி வரை வெற்றிக்காக போ ராடினார். 45 ரன் எடுத்த அவர் இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

நான் கண்ட வீரர்களில் இது போன்ற ஒரு சிறந்த வீரரை (பினிஷர்) கண்டதி ல்லை என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவரான வெங்க்சர்க்கார் குறிப்பிட்டு இருக்கிறார். 

மும்பையில் நிருபர்களைச் சந்தித்த வெ ங்க்சர்க்கார் அவர்களது கேள்விக்கு பதி ல் அளிக்கையில் மேற்கண்டவாறு தெ ரிவித்து இருக்கிறார். 

முத்தரப்பு தொடரில் இளம் வீரர்களை க் கொண்ட இந்திய அணி முதல் 2 லீக் கில் தோல்வி அடைந்தது. பின்பு சுதா ரித்து ஆடி வெற்றி பெற்று கோப்பை யையும் கைப்பற்றியது. தோனி ஓரு ஆவேசமான வீரர். நான் பார்த்த வீரர்க ளில் அவர் ஒரு சிறந்த பினிஷர். எந்த ஒரு நிலையிலும் மனம் தளராமல் ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய வர் என்றும் அவர் கூறினார். 

டி - 20 போட்டி உலகம் முழுவதிலும் புகழ் பெற்று விட்டது. ரசிகர்கள் மத்தி யில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில் ஏராளமான திறமையான வீரர் கள் பங்கேற்று வருகிறார்கள். இருந்த போதிலும், தோனியை போன்ற ஒரு வீரரை பார்க்க முடியாது என்றும் திலீ ப் தெரிவித்து இருக்கிறார். 

சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போ  ட்டியில் தோனி சிறப்பாக செயல்பட்டார். தற்போது 50 ஓவர் போட்டியில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்து இருக் கிறார் என்றும் திலீப் கூறியிருக்கிறார். 

கடந்த 2005 -ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற தோனி ஒரு நாள் போட்டியில் 3-வது வீரராக இறங்கி னார். இதில் அவர் 145 பந்தில் 183 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக் காமல் இருந்தார். 

ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவ ரை இது அவரது அதிகபட்ச ஸ்கோரா கும். இதில் 10 சிக்சர்களும் 15 பவுண்ட ரியும் அடங்கும். அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு இலங்கை அணியினர் திக்குமுக்காடினர். 

இலங்கை அணியில் அப்போது சமிந் தா வாஸ் மற்றும் முத்தையா முரளித ரன் ஆகிய 2 சிறந்த பெளலர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களுக்கு எதி ராக தோனி அபாரமாக ஆடியது குறிப் பிடத்தக்கது. 

தோனியின் ஆட்டத்தில் நல்ல முதிர்ச் சி தென்படுகிறது. அவர் மேலும், மே லும் சிறப்பாக ஆடி வருகிறார். அவரது இந்த பணி மேலும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும் வெங்க்சர் க்கார் தெரிவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்