மதிய உணவு வழங்கப்படும் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை. 19 - பீகாரில் அடுத்தடுத்து மதிய உண்வு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டதால், இனி மதிய உணவை தலைமை ஆசிரியர் ருசி பார்த்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் மதிய உணவு உண்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ஒரு பள்ளியில் கெட்டுப் போன நீரை அருந்தியதால், மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

தொடரும் இது போன்ற சம்பவங்களால் பீகார் அரசு பள்ளிகளுக்கு ஒரு புதிய உத்தரவினை அனுப்பியுள்ளது. அதில், மதிய உணவு உட்பட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அனைத்து உணவுகளையும் தலைமை ஆசிரியர் உண்டு பரிசோதித்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: