முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வில்வித்தை தகுதிச் சுற்று: இந்திய மகளிரணி முன்னேற்றம்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை. 19 - உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போ  ட்டியில் இந்திய மகளிரணி காலிறுதிக் கு முன்னேறியது. ஆடவர் அணி ஏமாற்றம் அளித்தது. 

கொலம்பியா நாட்டில் உள்ள மெடலி ன் நகரில் உலகக் கோப்பை வில்வித் தைப் போட்டிக்கான தகுதிச் சுற்று (ஸ்டேஜ் 3 ) நடந்தது. இதன் ரிக்கர்வ் பிரிவில் இந்திய மகளிர ணி அம்பை கச்சிதமாக எய்து 2-வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. 

இந்திய அணி தரப்பில் முன்னணி வீரா ங்கனையான தீபிகா குமாரி மற்றும் லைஸ்ராம் பாம்பேலா தேவி இருவ ரும் அம்பை மிக நேர்த்தியாக எய்து இந்திய அணி முன்னேற உதவினர். 

இந்தப் போட்டியில் சீன மகளிரணி அதிக புள்லிகள் பெற்று முதலிடம் பிடித்து முக்கிய போட்டிக்கு தகுதி  பெற்றது. இந்திய அணி 2-வது இடம் பெற்றது. 

இதில் தீபிகா 7-வது வாய்ப்பிலும், பா ம்பேலா தேவி 8 - வது வாய்ப்பிலும் அம்பை மிக நேர்த்தியாக எய்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்ததா க தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் ஆடவருக்கான ரிக்கர்வ் பிரி வில் இந்திய அணி ஏமாற்றம் அளித்த து. அந்த அணி எதிர்பார்த்ததை விட மிக மோசமாக அம்பை எய்து 14-வது இடத்தையே பிடித்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி 2- வ து இடம் பிடித்ததன் மூலம் காலிறுதிக் கு முன்னேறியது. இந்திய அணி தரப்பி ல் தீபிகா, பாம்பேலா தேவி மற்றும் ரிமில் பிருளி ஆகியோர் பங்கேற்றனர். 

மற்றொரு தகுதிச் சுற்றில் வெனிசுலா மற்றும் டொமினிக்கன் குடியரசு அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெ றும் அணியுடன் இந்திய மகளிரணி கா லிறுதியில் மோதும். 

சீன மகளிரணி தரப்பில், ஜூஜிங் 1349 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மற்ற சீன வீராங்கனைகளான செங் மிங் 4-வது இடத்தையும், பாங் யுட்டிங் 6-வது இடத்தையும், பிடித்தனர். சீன வீராங்கனைகளால் பின்னுக்குத் தள்ள ப்பட்ட தீபிகா 7-வது இடம் பெற்றார். அவர் பெற்ற புள்ளிகள் 1336. 

பாம்பேலா தேவி, தீபிகாவைவிட 1 புள்ளி குறைவாகப் பெற்று இருந்தார். ரிமுல் பிருளி ஒட்டு மொத்தத்தில் 14-வது இடம் பிடித்தார். சிறந்த இந்திய வீராங்கனைகளில் 3-வது இடம் பிடித்த அவர் பெற்ற புள்ளிகள் 1316 ஆகும். 

இந்தப் பிரிவில் சீன அணி மொத்தம் 4036 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. இந்திய மகளிரணி மொத்தம் 3987 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித் தது. 

மற்றொரு மூத்த இந்திய வீராங்கனையான டோலா பேனர்ஜி தகுதிச் சுற்றுப் போட்டியில் மிக மோசமாக அம்பை எய்து 32-வது இடத்தையே பிடித்தார். அவர் பெற்ற புள்ளிகள் 1251 ஆகும். 

இந்திய ஆடவர் அணி தரப்பில், அடா னுதாஸ் 1336 புள்ளிகள் பெற்று 5-வது இடம் பெற்றார். ஒலிம்பிக்கில் பங்கே ற்ற ஜெயந்தா தலுட்கர் 1291 புள்ளிகளு டன் 22-வது இடத்தையும், தருண்தீப் ராய் 1013 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தைப் பிடித்தார். 

இந்த தகுதிச் சுற் றில் 65 வீரர்கள் இடம் பெற்றனர். ராய் ஆசிய போட்டியில் வெள்ளி வென்றவர். 

இந்திய ஆடவர் அணி மொத்தம் 3640 புள்ளிகள் பெற்று 14-வது இடத்தைப் பிடித்தது. இந்திய அணி தரப்பில் தீபி கா மற்றும் அடானு இருவரும் இணைந்து தகுதிச் சுற்றில் 4-வது இடம் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கு பத க்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்