முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில்மீண்டும் வெள்ளம்: நிவாரண பணிகள் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூலை. 22 - வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவலாக மழை பெய்ததால் சாலை சீரமைப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவி வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் தர்கலா பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு சென்றுள்ள நிபுணர்கள் குழுவினரால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பெளரியை தாண்டி செல்ல முடியவில்லை. சமோலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி சஞ்சய்குமார் தெரிவித்தார். 

கனமழை பெய்து ஒரு மாதம் ஆன நிலையிலும் போதுமான கனரக வாகனங்கள் இல்லாதது மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் கேதார்நாத் பகுதியில் உள்ள இடர்பாடுகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை என உத்தரகாண்ட் காவல் துறை தலைவர் சத்யவிரத பன்சால் தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்