முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவைக் காய்ச்சல்: கோழிக்கறி விற்பனைக்கு தடை

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

காட்மாண்டு, ஆக.3 - பறவைக் காய்ச்சல் எதிரொலியாக காட்மாண்டுவில் கோழிக்கறி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. நேபாளத்தில் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதையடுத்து அங்கு  கோழிக்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காட்மாண்டு பள்ளத்தாக்கில் சோதனை நடத்தியபோது, சுதாதாரமற்ற முறையில் கோழிக்கறி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கோழிக்கறி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபற்றி நேபாள கால்நடை துறை இயக்குநர் விஜய் கந்தா கூறுகையில் பள்ளத்தாக்கில்  நடந்த சோதனையில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் இருப்பது தெரியவந்துள்ளது.  இதுவரை 33 ஆயிரம் கோழிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.  

எச்.5 என்ற வைரஸ் மூலமாக பரவும் இந்த பறவை காய்ச்சல் நோய் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்