முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்துரு மீது சேரன் போலீஸ் கமிஷனரிடம் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை ஆக 4 - சந்துரு  மீது சேரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவர்களுடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்கதில் காமினி புகார் கொடுத்தார்.

காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றி முன்தினம் இரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள். 

தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்றுமுன்தினம் நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார். 

நேற்று முன்தினம் நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு 'கவுன்சிலிங்' கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றோருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார். 

உயர் இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, தாமினி காதல் வலையில் விழுந்து விட்டார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அவருக்கு வயது 19 ஆகிறது. சான்றிதழ் பார்த்த பிறகு தான் அவர் மேஜர் வயதை கடந்துள்ளார் என்று தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு தான் அவருக்கு அறிவுரை கூற முடியும். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம். 

ஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார். இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றுமுன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் இயக்குனர் சேரன் புகார் ஒன்று அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

2 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் தாமினி, சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்கிற சந்திரசேகரை ஒரு கலை நிகழ்ச்சியின் மூலமாக சந்தித்தபோது அவர் அறிமுகமானர். நண்பர்களாக காமினியும், சந்துருவும் பழகி வந்தனர். பின்பு என் மகள் தாமினி சந்துருவை காதலிக்க தொடங்கினார்கள். கண்ணியமான் முறை தனது காதல் இருக்கும்படியாக தாவினி நடந்து கொண்டதாவும் எனது மகளன் தாமினி என்னிடம் தெரிவித்தார். உடனே நான் அவர்கள் குடும்பத்தினரை அழைத்து பேசி இன்னும் இரண்டு வருடங்கள் என் மகள் படிப்பு முடியும் வரை காத்திருக்கவும் என்று அதற்குள் சந்துரு (எ) சந்திரசேகரன் அவருடைய நடவடிக்கை சரியில்லை என தெரியவந்தது. உடனடியாக வரவும் என காவல் துறை அதிகாரி கூறினர். எனது மகள் தாமினியுடன் மேற்படி சந்துரு சோகதரி என கூறி கொண்ட ஒரு பெண் உடனிருந்த அவர் தான் காவல் துறை அதிகாரிகளுடனும் எங்களுடனும் பேசினாரே தவிர எனது மகளை பேசவிடவில்லை. எனது மகள் தலையை குனிந்து கொண்டு அழுது கொண்ட இருந்தார். எனவே என் மகளை மிரட்டியுடன் அச்சுறுத்தியும் காதலை பிரிக்க சதி என என் மகள் தாமினி மூலமாக என் மீது பொய் புகார் கொடுக்க வைத்துள்ள சந்துரு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இவ்வாறு புகார் மனுவில் சேரன் கூறியுள்ளார்.

கமிஷ்னர் ஜார்ஜ் சந்தித்து வெளியே வந்த சேரன் செய்தியாளரிடம் கூறியதாவது:-

நான் உண்மையான காதலுக்கு எதிரி அல்ல தகுதி படைத்த எவ்வளவே நபர்களுக்கு நானே முன்னின்று காதல் திருமணம் செய்து வைத்துள்ளேன் எனது தாமினி நல்ல நபராக யாரை தேர்ந்தெடுத்தாலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சம்மதமே என்னுடைய திருமணம் காதல் திருமணம் தான் ஆகவே கமிஷ்னர் ஜார்ஜிடம் எனது மகளை மீட்டு திரும் படி புகார் அளித்துள்ளனர். இவ்வாறு சேரன் கண்ணீர் மலக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்