முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானை தரிசிக்க 33 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, ஆக. 12 - திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 33 மணி நேரம் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். இந்த வாரம் ரம்ஜான் விடுமுறையை ஒட்டி பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கினர். ஏழுமலையானை தரிசிக்க தர்ம தரிசனம் மூலம் 33 மணி நேரமும் நடைபாதை பக்தர்கள் தரிசனம் மூலம் 19 மணி நேரமும் ஆனது. அதிகளவில் பக்தர்கள் வருகை காரணமாக ரூ. 300 விரைவு தரிசனத்தையும் ரத்து செய்து வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜா தெரிவித்தார். 

மேலும் திருமலையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருப்பதால் அனைத்து வாடகை அறைகளும் நிரம்பி உள்ளன. அதனால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வரும் இரண்டு நாட்களை தவிர்த்தால் நல்லது என்றும் அவர் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வாடகை அறைகள் கிடைத்தாலும் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நிலவி வரும் குளிரையும் பொருட்படுத்தாமல் மரத்தடிகளிலும் கிடைத்த இடங்களிலும் தங்கி உள்ளனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பால் மற்றும் உணவு பொட்டலங்களை தேவஸ்தானம் வழங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்