முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பீடி - சிகரெட் விற்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.13 - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீடி, சிகரெட் ஆகிய பொருள்களை விற்பனை செய்து வரும் 2 இணையதள நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கை நோட்டீஸ் இணையதளங்களுக்கு எப்.டி.ஏ. அனுப்பியுள்ளது. இதுகுறித்து எப்.டி.ஏ. கூறியதாவது: 

தோஸிஸ்மோக் மற்றும் வான்ட்ஸ்மோக் என்னும் இரு இணையங்கள் பீடி, சிகரெட்டுகள் நறுமண பீடி மற்றும் புகை குறைவாக வெளிவரும் புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றன. இந்தப் புகையிலை பொருள்களில் பெரும்பாலானவை கலப்படமானதாகும்.  இப்பொருள்களை விற்க எப்.டி.ஏ.வின் அணுமதி வேண்டும். ஆனால் இணையதளங்கள் அந்த அனுமதியைப் பெறவில்லை.

அதேபோல் இணயதளத்தில் விளம்பரப்படுத்தபடும் புகை குறைவாக வெளிவரும் புகையிலைப் பொருள்கள் குறித்து எவ்வித எச்சரிக்கையும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சட்டப்படி எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும் என்று தெரிவிததுள்ளது. இந்த எச்சரிக்கை நோட்டீஸ் குறித்து 15 நாள்களுக்குள் எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டும். சட்ட விதிமீறல்களை திருத்திக்கொண்டு அமெரிக்காவின் சட்ட ப்படி புகையிலைப் பொருள்களை விற்க நடவடிக்கை எடுக்குமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 நாள்களுக்குள் பதில் அளிக்கத் தவறினால் அபராதம், புகையிலை பொருள்களுக்குத் தடை, பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எப்.டி.ஏ. எச்சரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு பீடி மற்றும் சிகரெட்டுகள் பெரும்பாலும் இந்கியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து, ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அமெரிக்காவில் விற்கப்படும் சிகரெட்டில் இருப்பதை விட பீடியில் நிக்கோடின் டார் எனப்படும் கரிய நிறப்பொருள் மற்றும் கார்பன்டை ஆக்சைடு அதிக அளவு உள்ளதாக அந்த நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்