முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறுமைக்கும் எல்லை உண்டு: ஜனாதிபதி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 16 - இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் 67 வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

பொறுமைக்கும் எல்லை உண்டு. அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். நிலையான அரசு அடுத்த ஆண்டு தேர்தல் மூலம் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நெருங்கி வருகிறது. இந்த வாய்ப்பை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நிலையான அரசு ஏற்படச் செய்ய வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால்தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். சமூக நல்லிணக்கம், அமைதி, வளர்ச்சியை நோக்கி நாம் பயணம் செல்கையில் ஒவ்வொரு தேர்தலும் நமக்கு முக்கியமானதாகும். மீண்டும் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஜனநாயகம் நமக்குத் தந்துள்ளது. அந்த வாய்ப்பை நாம் வீணாக்காமல் துணிச்சலுடனும், மன உறுதியுடனும் செயல்பட்டு நமது பெருமைகளைக் கட்டிக்காக்க வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு அமைப்புகளுக்கும் பல்வேறு விதமான அதிகாரங்களை வழங்கியுள்ளன. இவற்றை நாம் ஒரு சீராகக் கொண்டு செலுத்த வேண்டும். மகாத்மா காந்தி நமக்கு அகிம்சை, சுயக்கட்டுப்பாடு அடிப்படையிலான சுயாட்சியை வலியுறுத்தியுள்ளார். அவரது போதனைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருவதால்தான் நமது நாடு ஏறக்குறைய 70 ஆண்டுகளாக ஜனநாயக நாடாக நிலைப் பெற்று வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றம், நீதிமான்கள் இடம்பெற்றுள்ள சுதந்திரமான நீதித்துறை, தவறு நடந்தால் அதைச் சுட்டிக்காட்ட பத்திரிகைகள், எப்போதும் விழிப்புடன் இருக்கும் மக்கள், திறமையான அதிகாரிகள் ஆகியோரால்தான் ஜனநாயகம் தழைத்து வருகிறது என்றார் அவர். அவரது உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்