முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதேரா மீதான நடவடிக்கை சரியே: ஐ.ஏ.எஸ். கெம்கா

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

சண்டீகர்,ஆக.19 - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நடவடிக்கை சரியே என்று கூறியிருக்கிறார் அரியானா ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் மீது ராபர்ட் வதேரா மீது நிலமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு அரியான அரசும் ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூர்கான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 3.5 ஏக்கர் நிலம் வாங்கியதில் இந்த மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ராபர்ட் வதேராவுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். யுனிவர்சல் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே நடந்த இந்த நிலபேரத்தை துணிச்சலோடு ரத்து செய்தவர்தான் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா. வதேரா மீது பல குற்றச்சாட்டுக்களையும் இவர் அறிக்கையின் மூலம் கூறியிருக்கிறார்.

இதனிடையே ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா,சி.என்.எல். தொலைக்காட்சிக்கு கூறியுள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் நீதிநெறி என்பது மேலிடத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடவடிக்கை எடுப்பது சுலபம். ஆனால் மேலிடத்து நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினமாகும். அதற்கு துணிச்சல் வேண்டும். துணிச்சலும் நீதிநெறியும் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ராபர்ட் வதேரா சோனியாவின் மருமகன் என்று தெரிந்துதான் நடவடிக்கை எடுத்தீர்களா? என்று கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார். அவர் மேலும் கூறுகையில் அவசரப்பட்டோ பழிவாங்கும் எண்ணத்துடன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி நான் தவறு செய்திருந்தால் அது கேலிக்கூத்தாகிவிடும். இருந்தாலும் உண்மையை வெளிக்கொண்டுவர புலனாய்வு அவசியம் என்பதை ஒப்புக்கொண்டு தன் பேட்டியை நிறைவு செய்தார் கெம்காம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்