முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசிடம் சுரங்க ஒதுக்கீடு ஆவணங்களை கோரும் சி.பி.ஐ

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 22 - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான காணாமல் போன 257 கோப்புகளை வழங்குமாறு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரியுள்ளது. மத்திய அரசு கடந்த 1993 ம் ஆண்டு முதல், நிலக்கரிச் சுரங்கங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடைபெற்ற மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பான 257 கோப்புகள் காணாமல் போனதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தக் கோப்புகளை வழங்குமாறு நிலக்கரி அமைச்சகத்துக்கு கடந்த மே மாதம் கடிதம் எழுதியதாகவும் இதுவரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேற்கண்ட 257 கோப்புகளில் 150 கோப்புகள், 1993க்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட 45 சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பானவை ஆகும். சில கோப்புகள், 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்புடையதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்