முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் ஒரு பெண்: பிராட்லி சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக. 24 - வில்லிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியங்களைத் தந்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பிராட்லி, தான் ஒரு பெண் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமெரிக்க ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 25 வயதான பிராட்லி மேனிங். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய 7 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள் மற்றும் போர்க்கள வீடியோ காட்சிகள் போன்றவற்றை ரகசியமாக எடுத்து விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு பிராட்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சமீபத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதிமன்றம் பிராட்லிக்கு 35ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் என்.பி.சி. தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிராட்லி மேனிங் தான் ஒரு பெண் எனக்கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

என்னைப்பற்றிய ஒரு உண்மையை தற்போது உங்கள் அனைவருக்கும் கூற விரும்புகிறேன். எனது உண்மையான பெயர் செல்சியா மேனிங். எம் பேரு செல்சியா.... நான் ஒரு பெண். நான் அடிப்படையில் பெண்மைத்தன்மை உடையவன். அதை எனது குழந்தை பருவத்திலேயே உணர்ந்து கொண்டேன். இனி உள்ள எனது வாழ்க்கையை ஒரு பெண்ணாக வாழ விரும்புகிறேன். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பெண்ணாக மாறுவதற்கான ஹார்மோன் தெரபி செய்து கொள்ள விரும்புகிறேன். இன்றிலிருந்து நீங்கள் என்னை ஒரு பெண்ணாக நினைத்து நடத்த கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார் பிராட்லி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்