முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சிறையில் ஜெகன் உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

குண்டூர், ஆக. 25 - தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கவுரவ தலைவர் ஒய்.எஸ். விஜயா மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறையில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கூடாது என்பதற்காக ராயலசீமா, கடலோ ஆந்திரா பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் விஜயாவும் போராட்டத்தில் குதித்தார். கடந்த 6 நாட்களாக அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை அவர் குண்டூர் மருத்துவமனையில் போலீசாரால் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சையை ஏற்க மறுத்து தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ்ஈடுபட்டார். இந்த நிலையில் சிறையில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் விஜயாவின் மகனுமாகிய ஜெகன் மோகன் ரெட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெகன் மோகன் ரெட்டி இன்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியை சஞ்சலகுடா சிறையில் இன்று சந்தித்த அவரது மனைவி பாரதி ரெட்டி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அத்துடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தெலுங்கானா பகுதி தலைவர்களுக்கு தமது விளக்க கடிதம் ஒன்றையும் ஜெகன் மோகன் அனுப்பவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்