முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.19 கோடி வரிப்பண முறைகேடு: கிலானி மீது புகார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. 26 ​ - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, மக்களின் வரிப் பணத்தில் ரூ. 19 கோடியை தவறாகப் பயன்படுத்தியதாக அந்நாட்டின் தலைமைத் தணிக்கையாளர் அமைப்பு குறை கூறியுள்ளது.பாகிஸ்தானின் தலைமைத் தணிக்கையாளர் அமைப்பு 2011-12ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு குறித்து தணிக்கை செய்து, அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், கிலானியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அரசுப் பணத்தில் வாங்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக யூசுப் ரஸா கிலானி மக்களின் வரிப் பணம் ரூ.19 கோடியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறை கூறப்பட்டுள்ளது.

மேலும், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை வாங்குமாறு பாகிஸ்தான் தொழில்துறை அமைச்சகத்துக்கு கிலானி உத்தரவிட்டார். அதன்படி, 200 ஆட்டோக்கள், 20 மினி பஸ்கள் மற்றும் டிரக்குகள், கார்கள் ஆகியவற்றை தொழில்துறை அமைச்சகம் வாங்கியது. அவற்றை, முன்னாள் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் பிர்தூஸ் ஆஷிக் அவான், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் எம்.பி. நாபில் கபோல் மற்றும் கராச்சியைச் சேர்ந்த சில தன்னார்வ நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்