Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.10 - வாக்கு எண்ணிக்கை மையங்களை இன்றைக்குள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 13 ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்றைக்குள் வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

தேவையற்ற நபர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைவதை தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கிலும் 3 அடுக்கு தடுப்பை ஏற்படுத்துமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ள ஆணையம் மையத்துக்குள் நடத்தை நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என தீவிரமாக கண்காணிககுமாறு பார்வையாளர்களை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தபால் வாக்குகளை முதலில் எண்ணப்பட வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago