முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20: இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

செஸ்டர் லீ ஸ்ட்ரீட், செப். 2 -  ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி - 20 போட்டியில் இங்கிலாந்து அணி  27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சம னாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், துவக்க வீரர் ஹேல்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக, லம்ப், ரை ட், மார்கன் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, டெர்ன் பேச், பிரிக்ஸ், பிராட், பின் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அடங்கிய கூட்ட ணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெ ற்றி தேடித் தந்தது. 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி- 20 போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு கிரவுண்டில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்து சவாலான ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில் நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழ ப்பிற்கு 195 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஹேல்ஸ் அதிகபட்சமாக 61 பந்தில் 94 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, லம்ப் 43 ரன்னையும், ரைட் 30 ரன்னையும், மார்கன் 20 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், இளம் சுழற் பந்து வீச்சாளரான பவாட் அகம து 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பால்க்னர் 2 விக்கெட் எடுத்தார். 

ஆஸ்திரேலிய அணி 196 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற் கு 168 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 2-வது போட்டியில் இங் கிலாந்து அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போ  ட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 42 பந்தில் 53 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்ட ரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, கே ப்டன் பெய்லி 23 ரன்னையும், மேக்ஸ் வெல் 27 ரன்னையும், மார்ஷ் மற்றும் கோல்டர் நைல் தலா 13 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான டெர்ன்பேச் 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, பிரிக்ஸ் 2 விக்கெட்டும், பிராட், பின் மற்றும் ஜோ ரூட் ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந் தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்