முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா வீடு திரும்பினார்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க்,செப்.2 - தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, பிரிட்டோரியா மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினார். கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதியிலிருந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதபோதும், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று அரசு தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர்  பிரிட்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சைபெற்று வந்தார். ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அவர் ஆம்புலன்ஸில் போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். அவரது உடல்நிலை இன்னும் அதே நிலையில் தான் உள்ளது. எவ்வித முன்னேற்றமும் இல்லை. 95 வயதான நெல்சன் மண்டேலா அவரது உடல்நிலை காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எதிர்காலத்தில் அவரது உடலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது சிகிச்சை தேவைப்பட்டாலோ அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படும். மண்டேலாவுக்கு டாக்டர்கள் குழுவும், தனியார் மற்றும் ராணுவ டாக்டர்கள் அவருக்கு வேண்டிய சிகிச்சையை அளித்தனர் என்று அதிபர் ஜேக்கப் சுமா அலுவலகச் செய்திககள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்