முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: நடால் - லியாண்டர் முன்னேற்றம்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப். 2 -  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ல் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா மற்றும் டிவிஜ் ஷரண் ஆகியோர் வெ

ற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ஆனால் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான பெட்ரா விட்டோவா 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப  ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியயன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்

து உள்ளனர். இது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி

ழ்வித்து வருகின்றனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் நடாலும், குரே

சிய வீரர் இவான் டுடிக்கையும் மோதினர். 

இதில் நடால் சிறப்பாக ஆடி, 6-4, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் குரேசிய வீரரை வென்று 4 வது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரரான டேவிட் பெர்ரர் 6-4, 6-3, 4-6,6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் மிகேல் குஷ்கினை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 7- வது இடத்தில் உள்ள செக் நாட்டின் பெட்ரோ விட்டோவா 3-6, 0-6, என்ற நேர் செட்டில் அமெரிக் காவின் அலிசன் ரிஸ்கியிடம் படுதோல்வி அடைந்தார். 

செர்பியாவின் அனா இவானோவிக் 4-6, 7-5, 6-4, என்ற கணக்கில்  அமெரிக்காவின் கிறிஸ்டினாவை வென்றார். பெலாரஸ் முன்னணி வீராங்கனையா

ன விக்டோரியா அசரென்கா 6-7, 6-3, 6-2 என்ற கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை அலிஸ்டா கார்னெட்டை வீழ்த்தினார். 

இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ஹெங்க் (சீனா) ஜோடி 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஹங்கேரியின் மரோசி மற்றும் மெளடன் லெவி (அமெரிக்கா) இணையை தோற்கடித்தது. ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில், லியாண்டர் பயஸ் மற்றும் ஸ்டீபானிக் (செக். குடியரசு) ஜோடி 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் டேனியல் (ஜெர்மனி), பிலிப் வோஸ்வால்டு (ஆஸ்திரியா) இணையை வென்றது. 

மற்றொரு இரட்டையர் பிரிவில் 

ரோகன் பொபண்ணா மற்றும் ரோஜர் வெசலின் (பிரான்ஸ் ) ஜோடி 7-6 7-6, என்ற நேர் செட்டில் நிக்கோலே டேவி

டென்கோ மற்றும் மிகைல் வெல்கின் ஜோடியை வென்றது. இந்தியாவின் டிவிஜ் ஷரண் ஜோடி மற்றும் ஷன்லூ (தைபெய்) ஜோடி 6-5, 5-7 7-6 என்ற கணக்கில் இஸ்ரேலின் எர்லிச் மற்றும் ஆன்டிராம் இணையை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்