முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நரேந்திர மோடியுடன் கவர்னர் மீண்டும் மோதல்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

காந்திநகர், செப்.4 - லோக் ஆயுக்தா மசோதா விவகாரம் தொடர்பாக குஜராத்தில் முதல் அமைச்சர் நரேந்தர மோடிக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக நரேந்திர மோடிக்கும், கவர்னர் கமலா பெனிவாலுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. ஏற்கெனவே லோக் ஆயுக்தா நீதிபதியை கவர்னர் நியமித்தார். 

மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் நீதிபதியை நியிமித்திருப்பதாகக் கூறி நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து குஜராத் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. 2004-ம் ஆண்டு முதல் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. இதற்கிடையே லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம் தொடர்பாக புதிய நெறிமுறைகளை மாநில அரசு உருவாக்கியது. அதன்படி லோக் ஆயுக்தா நீதிபதி நியமன விஷயத்தில் மாநில கவர்னர் தலைமை நீதிபதி ஆகியோருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு முதல் மந்திரி தலைமையிலான குழுவுக்குத்தான் முழு அதிகாரம் என்ற வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்த திருத்தத்துக்கான தீர்மானம் குஜராத் சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. ஆனால் கவர்னர் கமலா பெனிவால் இந்த தீர்மானத்தை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இதுபற்றி காந்தி நகரில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநில அரசு சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்வதற்காக குறிப்பாக லோக் ஆயுத்தா நீதிபதி நியமனம் விஷயம் தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டும், பழைய முறையே நீடிக்க வேண்டும் என்று கூறியும் திருப்பி அனுப்பியுள்ளார் என்றார்.

சட்ட சபை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி இருப்பதன் மூலம் கவர்னருக்கும், முதல் மந்திரி மோடிக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்