முக்கிய செய்திகள்

புதுவையில் ஆஸ்திரேலிய பிரதமரின் உருவபொம்மை எரிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      தமிழகம்
julia-gillard2

 

புதுச்சேரி, மே.11 - ஆஸ்திரேலிய பிரதமரின் உருவபொம்மையை எரித்த இந்து முன்னணியினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய நாட்டில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் நீச்சல் உடை அணிந்த ஒரு அழகி இந்து கடவுளான லட்சுமி உருவ படத்தை தனது உடையில் பொறித்திருந்தார். 

இதையடுத்து இந்து கடவுளை அவமதித்ததாக கூறியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியன் கில்லர்ட்டை கண்டித்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். அது போல புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் மாலை புதுவை மறைமலையடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகர தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சனில்குமார், பொதுச்செயலாளர் முருகையன், செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 

அப்போது இந்து முன்னணியினர் திடீரென்று வேனில் மறைத்து வைத்து இருந்த ஆஸ்திரேலிய பிரதமரின் உருவ பொம்மையை எடுத்து வந்து எரித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையின் தீயை அணைத்தனர்.

மேலும் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் முருகையன் மற்றும் நிர்வாகிகளான முதலியார்பேட்டை மணி வீரப்பன், பெரியார் நகரை சேர்ந்த முருகானந்தம், சாம்பல்பேட்டை சேர்ந்த பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: