100 அடி உயரத்தில் இருந்து விழுந்து தப்பிய குழந்தை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

லண்டன், செப். 11 - இங்கிலாந்தில் 100 அடி உயர மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்தது. லண்டன் பினைமெனத் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் 100 அடி உயர தளத்தின் ஜன்னல் வழியாக 16 மாத பெண் குழந்தை தவறி கீழே விழுந்தது. இதில் உயிர் பிழைத்த அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்துக்குரிய வகையில் யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: