முக்கிய செய்திகள்

பஞ்சாப் மந்திரியின் தனி செயலாளர் கைது

புதன்கிழமை, 11 மே 2011      ஊழல்
no image 28

 

சண்டிகார், மே11 - பஞ்சாப் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சரின் தனி செயலாளர் பாங் சிங்கை ரூ.1.5 கோடி லஞ்ச வழக்கில் சி.பி.ஐ.அதிகாரிகள் கைது செய்தனர்.பஞ்சாப் மாநில தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர்  ஸ்வர்ணராமின் தனிச்செயலாளராக இருப்பவர் பாங் சிங். 

பஞ்சாப் தொழில் நுட்ப கல்வித்துறைக்கும் பஞ்சாப் தொழில் துறைக்கும் இடையே ரூ.1.50 கோடிக்கு லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக பஞ்சாப் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் ஸ்வரன் சிங், தொழில் துறை அமைச்சர் மனோரஞ்சன் காளியா  ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே துருவித் துருவிவிசாரணை நடத்தியுள்ளனர்.

தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் ஸ்வரன் சிங், தொழில் துறை அமைச்சர் காளியாவுக்கு அனுப்பிய கடிதத்தை பின்னணியாக வைத்து தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சரின் தனி செயலாளர் பாங் சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாங் சிங் பின்னர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரீட்டு தாகூர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: