முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து துணை சபாநாயகர் பலாத்கார புகாரில் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

லண்டன், செப். 13 - இங்கிலாந்தில் பலாத்காரம் உள்பட பல புகார்கள் வந்ததையடுத்து துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இங்கிலாந்தின் துணை சபாநாயகர் நைஜல இவான்ஸ். இவர் மீது பலாத்காரம், அநாகரீகமாக நடந்தது, பலாத்கார முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டது. கடந்த 2002 முதல் 2013 வரை பல குற்றங்களில் இவர் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இவற்றில் 8 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இது குறித்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இது வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். இதில் எதுவுமே உண்மையில்லை என்று இவான்ஸ் மறுத்து வருகிறார். 

இவான்ஸ் மீதான வழக்குகளை லான்ச்சாஷயர் போலீசார் மற்றும் கிரவுன் பிராசிக் யூஷன் சர்வீசஸ் அமைப்பு தீவிரமாக விசாரித்தது. இதில் துணை சபாநாயகர் நைஜல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளது என்று இந்த அமைப்புகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர் அவர்களுக்கு பாதகமாக செயல்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் இவான்ஸ் வரும் 18 ம் தேதி ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இவான்ஸ் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்