முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 16 வழக்கின் தீர்ப்பு: அமெரிக்கா வரவேற்பு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், செப். 16 - புது டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்ததை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் மேரிஹார்ப் கூறியதாவது, மாணவியை கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் தண்டனை விதித்ததன் மூலம் இந்திய நீதி அமைப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், இதே போல் இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் இத்தகைய பயங்கர வன்முறைக்கு அநேக மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கவலை கொண்டுள்ளோம். அதே வேளையில் சமூகத்தில் இதற்கு தீர்வு காணும் பொறுப்பும் உள்ளது. 

பாலியல் குற்றங்கள் தொடர்வது சவாலாக உள்ளது. அதை போக்க தனி கவனம் செலுத்தும் நாங்கள் உலக  மக்களுடன் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார். இந்த தீர்ப்பு பெண்களின் வீரம் மற்றும் போராட்டத்திற்கு கிடைத்த நீதி என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி ஓடும் பேருந்தில் சக மாணவருடன் சென்ற 23 வயது மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் புது டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்