முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்க இலாகா அதிகாரிகள் வீடுகளில் சி.பி,ஐ. சோதனை

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், செப்.27 - கேரளத்தில்  விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் வீடுகளில் சி.பி,ஐ. அதிகாரிகள்  சோதனை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் பணியில் இருந்த சுங்க இலாகா அதிகாரிகள் கடந்த வாரம் விமானத்தில் தங்கம் கடத்தி வந்த பைசல் என்பவரை  பிடித்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, இதுபோல் பலமுறை  வளைகுடா நாடுகளிலிருந்து  தங்கம் கடத்தி வந்ததாகவும், பின்னர் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் உதவியுடன் கடத்தல் தங்கத்தை வெளியே கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இது உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதுபற்றி விசாரிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டனர். 

அதன்படி தங்கம் கடத்தல் மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் யார் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் தலச்சேரியில் உள்ள சுங்க இலாகா சூப்பிரண்டு ஒருவரின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.  இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. கடத்தலுக்கு துணையாக இருந்த பலர் பற்றிய வவிரம் தெரிய வந்துள்ளது

.                 26ராம்54

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்

புதுடெல்லி, செப்.27 - பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கூடத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றுள்ளார்.  இந்நிலையில்  பிரதமர் மன்மோகன்சிங்குக்கு  அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் 1990-ல் தீவிரவாதத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதிக்கான சீக்கியர் அமைப்பு  கோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் மன்மோகன்சிங்கும் சேர்க்கப்பட்டுள்ளார்.

  தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அந்த நாட்டு கோர்ட் பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவசர விசாரணையாக இதை எடுத்துக்கொண்டு வெள்ளை மாளிகை வரை இந்த சம்மனை கொண்டு செல்ல கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

        

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்