முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு - பிரவின்குமார்

புதன்கிழமை, 11 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.12 - நாளை மறுநாள் நடைபெறும் (13-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவின்குமார் கூறியுள்ளார். 

நேற்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவின்குமார்  சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 966 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றுவார்கள். தமிழ்நாட்டிற்கு மேலும்  18 துணை ராணுவம் கம்பெனிகள் வருகை தரவுள்ளனர். அதில், 9 கம்பெனிகள் சென்னையிலும், 5 கம்பெனிகள் திருச்சியிலும், 4 கம்பெனிகள் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணும் அறையில் செல்போன் பேச அணுமதியில்லை. இங்க்பேனா, சிகிரெட், லைட்டர் ஆகியவற்றிற்கு அணுமதியில்லை. அடையாள அட்டையில்லாமல் கலெக்டர் உள்பட யாருக்கும் அணுமதியில்லை. செல்போன் பேசுவதற்கு வேட்பாளர், தலைமை அதிகாரி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு அறை ஒதுக்கப்படும். எந்தந்த மேஜையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரியை மாலை 5.00 மணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 8.00 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை பணி தொடரும். 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 17சி படிவத்தில் வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்படும். தேர்தல் முடிவுகள் ஒரு சுற்றி முடிவுகள் மூன்று வகையில் அறிவிக்கப்படும். ஒன்று அறிக்கை மாதிரி அறிவிக்கப்படும். இரண்டாவது வேட்பாளர், செய்தியாளர் ஆகியோரிடம் கொடுக்கப்படும். எண்ணிக்கைகள் மைக் மூலம் அறிவிக்கப்படும். இறுதியாக போர்டில் எழுதப்படும். ஓட்டு எண்ணிக்கைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கம்பியூட்டர் டேடா எண்டிரியை ஆப்ரேட்டர் மூலமாக ஆர்.ஓ தேர்தல் அதிகாரி மேஜை பக்கத்தில் இருக்கும்போது பதிவு செய்யப்படும், அல்லது அதை கண்காணிக்க வேட்பாளர் ஏஜெண்டுக்கு அனுமதி வழங்கப்படும். 

இந்த தேர்தலில் 6 ஆயிரத்து 818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5935 பேர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 386 வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 386 பேர் மீது குற்றப்பத்திரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. 1378 பேர் மீது தண்டனை, குற்றம் நிருபிக்கப்படும். 4559 ஆகியோர் மீது வழக்கு விசாரணையில் உள்ளது. தேர்தல் கமிஷனின் பணிகள் திருப்தியாக இருந்தது. தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் செயல்பாடு குறித்து விமர்ச்சித்திருக்களோ? என்று கேள்வி கேட்டதற்கு,  அவர் நாங்கள் சட்டத்தை மதித்து, செயல்பட்டு இருக்கிறோம். எந்த கட்சி என்றும் பார்க்கவில்லை. எந்த நடவடிக்கை எடுத்தாலும், கருத்து சொல்வார்கள். இவ்வாறு பிரவின்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony