முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் பயணம் செய்த சிறுவன்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லாஸ்வேகாஸ், அக்.8 - அமெரிக்காவில் 3 அடுக்கு பாதுகாப்பை தாண்டிவிமானத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமான பயணிகளின் பாதுகாப்பு  கேள்விக் குறியாகி உள்ளது. 

மின்போலிஸில் உள்ள செயின்ட் பவுல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லாஸ்வேகாஸ் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது.  பயணிகள் அனைவரும் 3 அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விமானத்தில் ஏறினர். விமானம் லாஸ் வேகாஸை சென்றடைந்தது. அதற்கு முன்பாக நடுவானில் விமானம் சென்றபோது, விமானப் பயணிகள் கண்காணிப்பாளருக்கு அதில் பயணம் செய்த சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்த விமானத்தில் 9 வயது சிறுவன் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த சிறுவனை கண்காணிப்பாளர் போலீஸாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் டுவின் நகரத்திலிருந்து அந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது. 3 அடுக்கு பாதுகாப்பை மீறி அவன் விமானத்துக்குள் நுழைந்துள்ளான். கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தபோது சிறுவன் ஊடுருவியது தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி அவனது பெற்றோரிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவனைத் தேடிக்கொண்டிருந்தோம் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்