முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முலாயம்மை சி.பி.ஐ. மூலம் காங்., மிரட்டுகிறது: மோடி

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.11 - முலாயம்சிங்கை சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். 

முலாயம்சிங் குடும்பத்தினரின் சொத்துகள் பற்றி வருமானவரித் துறையிடம் சி.பி.ஐ. விளக்கம் கேட்டுள்ளது. இது சி.பி.ஐ.யை பயன்படுத்தி முலாயம்சிங்கை  காங்கிரஸ் மிரட்டுவதை காட்டுகிறது என்று மோடி தெரிவித்தார். 

முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கடந்த 6 ஆண்டுகளாக சி.பி.ஐ. நடத்தி வந்தது. இதில் முலாயம்சிங்கின் மனைவி சாதனாவுக்குச் சொந்தமாக லக்னோவில் உள்ள சொத்து குறித்தும், அவரது மகன் பிரதீக் பெயரில் உள்ள சொத்து குறித்தும்  விசாரிக்கப்பட்டது. விசாரணையில் பிரதீக் 6_வயதாக இருக்கும்போதே அந்த சொத்து வாங்கப்பட்டதாக சாதனா தெரிவித்திருந்தார். 

இதற்குப் பிறகு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை சி.பி.ஐ. முடித்துக்கொண்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அடுத்த பிரதமர் 3_வது அணியிலிருந்துதான் வருவார் என்று முலாயம்சிங் கூறியிருந்தார். 3_வது அணி உருவாவதை விரும்பாத காங்கிரஸ் கட்சிக்கு இது எரிச்லை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சி.பி.ஐ. வருமானவரித் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் முலாயம்சிங், சாதனா, பிரதீக் ஆகியோரின் சொத்துக்கள் பற்றி விளக்கம் கேட்டுள்ளது. இதனால் முலாயம்சிங் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். 

இதற்கிடையே 3_வது அணி பற்றி முலாயம்சிங் கருத்து கூறியதால் அவர் மீது சி.பி.ஐ. யை ஏவி விட்டதாக  பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி மோடி கூறுகையில் மத்திய அரசு  முற்றிலும் செயலிழந்து விட்டது. சி.பி.ஐ.யை தவறாகப் பயன்படுத்தி அரசியல் லாபம் அடைய காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஏற்கெனவே இதுபோல் மாயாவதி மீது சி.பி.ஐ.யை அனுப்பியதை அனைவரும் அறிவார்கள்.  இப்போது அதே தந்திரத்தை முலாயம்சிங் மீது காங்கிரஸ் கட்சி ஏவிவிட்டுள்ளது என்று மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்