முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ்.சங்கத்தினர் பிரணாப்பை சந்திக்க முடிவு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.22- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக நிலக்கரி துறையின் முன்னாள் செயலர் பரேக் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் உயர் அலுவலர்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து முறையிட உள்ளதாக ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் சங்கத் தலைவர்  சஞ்சய் போஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றச் செயலகத்தின் தனிச் செயலர் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் செயலர் உள்ளிட்டோரை சந்தித்து முறையிட உள்ளோம்.  தேவைப்பட்டால்   மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரைசந்திக்க முடிவு செய்துள்ளோம். ஒரு சிலர் தவறுக்கு துணையாக  இருக்கலாம். ஆனால் தவறு செய்யாதவர்களை தண்டிப்பது தவறானது என்றார்.

இது தொடர்பாக ஐ.பி,எஸ். அதிகாரிகள் சங்க செயலரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐ.ஜி.யுமான பங்கஜ் குமார் கூறுகையில் நான் பரேக்குடன் பழகியுள்ளேன். அவர் நேர்மையானவர் என்றார்.

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லாவுக்கு 2005_ல் ஒடிஸா மாநிலத்தில் இரு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. அண்மையில் வழக்கு பதிவு செய்திருந்தது. பரேக் மீதும் முதல் தகவல் அறிக்கை பகிவு செய்யப்பட்டுள்ளது. 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்