முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.ம.உ. கமிஷன் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியாது

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.22 - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக  தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக உள்ள பாலகிருஷ்ணனை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று மத்திய அரசுக்கு அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கடிதம் எழுதியுள்ளார்.  

தேசிய மனித உரிமை கமிஷன் தலைவரகாக இருக்கும் பாலகிருஷ்ணன் இதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தகாக  அவரது மகன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் பாலகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாலஏகிருஷ்ணனை  தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் சவுகான், பாப்தே ஆகியோர்  அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வருமானவரித் துறை, பாலகிருஷ்ணன், அவரது மகன் மீது நடத்திய விசாரணையில் எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 இந்த வழக்கில் ஆலோசனை கூறுமாறு அட்டர்னி ஜெனரல் வாகன்வதித்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு வாகன்வதி 13 பக்க கடிதம் எழுதியுள்ளார்.  அதில்  சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பாலகிருஷ்ணன் பதவி வகித்த காலத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர் வகிக்கும்  தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியை பறிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்