முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - சீன உறவில் முன்னேற்றம் ஏற்பட அமைதி அவசியம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

மாஸ்கோ,அக்.23 - இந்தியா_சீனா இடையே உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மன்மோகன் சிங்,ரஷ்யா, சீனாவுக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார். மாஸ்கோவில் இருநாடுகளிடையேயான வருடாந்திர உச்சிமாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். பின்னர் அதிபர் புட்டீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளிடையே காலத்திற்கு ஏற்ப புதிய உறவு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யாவில் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். புறப்படுவதற்கு முன்பு சீன நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஒன்றுக்கு எழுத்து மூலமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா_சீனா இடையே உறவு சீரடைந்து வருகிறது. உறவு மேலும் முன்னேற்றம் அடைய இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைதி அவசியம் என்று வலியுறுத்தினார். இருநாடுகளிடையே எல்லைப்பிரச்சினை இருக்கிறது. இது சிக்கலானதும் உணர்வுப்பூர்வமானது என்பது உண்மையே. எல்லைப்பிரச்சினையை தீர்க்க இருநாடுகளும் பல வழிகளிலும் முயன்று வருகிறது. இருநாடுகளும் சிறப்பு குழுவை அமைத்துள்ளன. இந்த குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துபேசி ஒரு வரையறைக்கு வந்துள்ளனர் என்றார். எல்லைப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்த இரண்டு குழுக்களும் ஒரு அளவுகோலை கோரியுள்ளன. இரண்டு நாடுகளின் எல்லையில் அமைதி நிலவுவது இருநாடுகளில் வசிக்கும் சுமார் 220 கோடி மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். கடந்த 1993,1996,மற்றும் 2005_ம் ஆண்டுகளில் இருநாடுகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்  கூறினார். இருநாடுகளின் அரசுகளும், எல்லைப்பகுதியில் அமைதி நிலவுவதையே விரும்புகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார். 

சமீபகாலகமாக லடாக் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவல் செய்தது. இந்திய எல்லைக்குள் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவி கூடாரங்களை அமைத்தது. இதற்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் படைகளை சீனா வாபஸ் பெற்றது. மேலும் லடாக் பகுதியில் சீன ராணுவமானது போர் விமானத்தளத்தை அமைத்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் விமானப்படை தளத்தை அமைத்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசலப்பிரதேச மாநிலத்தையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதாவது ஆயுத பலத்தை வைத்துக்கொண்டு அண்டை நாடுகளை சீனா மிரட்டி வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்