முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்குகள் - ஜெயலலிதா பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே 15. - கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத்தின் திறைமைகளை பார்த்து மக்கள் மனம்மாறி வாக்களித்துள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.நேற்று சென்னை போய்ஸ்  தோட்டத்தில் அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 தமிழக மக்கள் மீண்டும் என்னை தேர்ந்து எடுத்தற்க்கு காரணம், அவர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையாகும். இதனை நாங்கள் ஏற்று அவர்களின் ஏதிர்பார்களையும், நாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்குகள் தி.மு.க. வுக்கு எதிரான வாக்குகள் மட்டுமல்ல, எங்கள் மீது உள்ள நம்பிக்கையின் பேரில் கிடைத்த வாகக்குகளாகும். கடந்த 2001- 2006  ஆண்டு நடைபெற்ற எனது ஆட்சியின் நிர்வாக திறைமைகளை பார்த்து உள்ளனர். அந்த நல்ல நாட்களை மீண்டும் அவர்கள் பார்க்க விரும்புகின்றனர். எனவே இன்று நான்  தமிழக கவர்னரை சந்தித்த பிறகு பதவி ஏற்கும் நாள் பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony