சிரியா உள்நாட்டுப் போரில் 11 ஆயிரம் குழந்தைகள் பலி

Image Unavailable

 

டமாஸ்கஸ், நவ.26 - சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில்  11 ஆயிரம் குழந்தைகள் பலியாகி உள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக நசடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 11 ஆயி ரம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் ஆட்சி செய்து வருகிறார். கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக அவரது குடும்பத்தினர் ஆட்சியை தங்கள் வசம் வைத்துள்ளனர். பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த2010_ம் ஆண்டு துனிசியாவில் கிளர்ச்சி ஏற்பட்டது. இதுபடிப்படியாக விரிவடைந்து 2011_ல் சிரியாவில் உள்நாட்டுக் கலவரமாக வெடித்தது. 

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஆசாத் ஆதரவுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த ஆசாத் அரசின் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படு த்தியதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையே சிரியாவின் நிலை குறித்து ஆக்ஸ்போர்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் தெரியவந்தாதவது:

சிரியாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 2011_ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையில் சிரியாவில் 1 லட்சம் பொதுமக்கள் உள்நாட்டுப்போரில் கொல்லப்பட்டுள்ளனர்.  இவர்களில் 11ஆயிரம் பேர் குழந்தைகள். 128 குழந்தைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் எந்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                         

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ