முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ்சுடன் இன்று இந்தியா கடைசி மோதல்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கான்பூர்,நவ.27 - வெஸ்ட் இண்டீஸ்சுடன் இந்திய அணி இன்று கடைசியாக மோதுகிறது. வெஸ்ட் இண்டீஸ்_இந்தியா ஆகிய அணிகளிடையே நடந்த 3 ஒரு நாள் போட்டி தொடரில் கொச்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றன. இதனால் 1:1 என்ற சமநிலை ஏற்பட்டது. இந்த அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை வென்றதுபோல இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

அதேநேரத்தில் டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடரைவாவது கைப்பற்றி வேண்டும் என்ற ஆவேசத்தில் உள்ளது. இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடுவதால் தொடரை வெல்ல கடுமையான போட்டி இருக்கும். பேட்டிங்கில் சிறப்பாக இருக்கும் இந்திய அணி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் பலவீனப்பட்டு காணப்படுகிறது. இதை சரி செய்தால்தான் தொடரை வெல்ல முடியும். பேட்டிங்கிலும் ரெய்னா, யுவராஜ் ஆகியோர் திணறி வருகிறார்கள். எனவே இவர்கள் இருவரும் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம். கிராக்ஹோலியின் ஆட்டம்தான் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கிறது. பிராவோ தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று தெரிகிறது. லெண்டீஷ் சிம்மன்ஸ், போவெல்,  டாரன்ஸ் சேமி, சாமுவேல்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் இந்த அணியில் உள்ளார்கள். இரண்டு அணிகளுமே தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் டோனி, சிகார் தவாண், ரோஹித் சர்மா, விராட் ஹோலி, யுவராஜ் சிங், ரெய்னா, சடேஜா, அஸ்வின்,  புவனேஸ்வுமார். முகமது ஜமி, மோஹித் சர்மா, அமீத் மிஸ்ரா, அம்பதி ராயுடு, வினாய் குமார், செய்தேவ் உனக்கட்டு ஆகியோர் விளையாடுகின்றனர். வெஸ்ட் இண்டீஷ் அணியில் பிராவோ, தினாவோ, போவல், சார்லஸ், சாமுவேல்ஸ், டாரன்பிராவோ, டாரன்ஸ் செமி,  சிம்மன்ஸ்,  சினில் நரின், வீராசாமி பெருமாள், ராம்பால், டினோபெஸ்ட், நரசிங் ஆகியோர் விளையாடுகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்