பெருவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு

Image Unavailable

 

லிமா, நவ, 27 - தென் அமெரிக்க நாடான பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரு தலைநகர் லிமாவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவாகியிருந்தது.

 

நிலநடுக்கம் உணரப்பட்ட போது மக்கள் பீதியில் வீடுகளில் இருந்தும், அலுவலகங்களில் இருந்தும் வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் பெரிய அளவில் இல்லாததால் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் பெருவில் 7 ரிக்டர் புள்ளிகள் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ