காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுடன் போருக்கு வழிவகுக்கும்

Image Unavailable

 

இஸ்லாமாபாத்,டிச.5 - காஷ்மீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணாவிட்டால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4_வது தடவையாக போருக்கு வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடுமையாக கூறியுள்ளார். 

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் இருந்தது. இதில் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது. மீதம் தற்போது உள்ள ஜம்மு_காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. காஷ்மீரை சுற்றிலும் சீனா,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன. அதனால் இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் ஜம்மு_காஷ்மீர் மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்துவிட வேண்டும் என்று பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பதோடு அவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட செய்வது. இந்தியாவுக்கு எதிராக ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது, அணுஆயுதங்களை தயாரிப்பது, சீனாவுடன் நல்லுறவு வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுவது போன்ற செயல்களில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இந்தியா_பாகிஸ்தான் இடையே காஷ்மீர் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்தியா_பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் தீவிரவாதிகள் விஷயத்தால் இந்த பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்படுகிறது. 

இந்தநிலையில் இனிமேல் இந்தியா_பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும்போது காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். காஷ்மீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா_பாகிஸ்தான் இடையே 4_வது முறையாக போர் நடக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அந்த உரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் காஷ்மீர் பிரச்சினைதான் முக்கியமானதாகும். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும். இனிமேல் இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். காஷ்மீர் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி தீர்வுகாண வேண்டும். இதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு அணுஆயுத நாடுகளிடையே 4_வது போர் ஏற்படலாம். நான் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றபோது அதிபர் கிளிண்டனை சந்தித்து பேசினேன். அப்போது இந்த பிரச்சினையை எழுப்பினேன். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதை அதிபர் ஒபாமா ஒப்புக்கொண்டார்.இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ