ஏமனில் தீவிரவாதிகள் தாக்குதல்: 56 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

சனா, டிச. 9  - ஏமன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய நர்சு உட்பட 56 பேர் பலியானார்கள். இது பற்றிய விபரம் வருமாறு _ 

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ராணுவ அமைச்சக அலுவலகம் இயங்கி வருகிறது. அதன் வளாகத்தில் ஆஸ்பத்திரி உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பு அந்த வளாகத்தில் ராணுவ சீருடையில் தீவிரவாதிகள் புகுந்தனர். 

அதே நேரத்தில் வாகனத்தில் வந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வளாக கேட் மீது பயங்கரமாக மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். 

இதற்கிடையே உள்ளே புகுந்த தீவிரவாதி கள் வளாகத்துக்குள் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் 56 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த நர்சும் ஒருவர். 

அவரது பெயர் ரேணு. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இவர் ராணுவ அமைச்சக வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் பணி புரிந்தார். 

இத்தாக்குதலில் அவரது கணவர் தாமஸ் மற்றும் மற்றொரு இந்தியரான மரியம்மா தாரியன் என்பவரும் காயம் அடைந்தனர். 

இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தவிர, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். 

இவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் பணி புரிந்தவர்கள்.  இத்தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களும் பலியானார்கள். 

இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளார்கள். சவுதி அரேபியா மற்றும் ஏமனில் அமெரி க்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ராணுவ பாதுகாப்பில் இருக்கும் ராணுவ அமைச்சகம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: