முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - சீன படைகளுக்கிடையே மோதல் ஏற்படலாம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.17 - எல்லைப்பகுதியில் இந்தியா_சீனா படைகளுக்கிடையே மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

விஜய் திவாஸ் தினத்தையொட்டி நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் இந்தியா_சீனா எல்லைப்பகுதி மிகவும் நீண்டதூரமாகும். அதனால் எல்லைப்பகுதியில் குறிப்பாக எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினர்களுக்கிடையே மோதல் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார். இருந்தாலும் பிரச்சினைக்கு தற்போது உள்ள இருநாடுகளின் குழுக்கள் மூலம் பிரச்சினைக்கு பேசி தீர்வுகாணப்படும் என்று அந்தோணி தெரிவித்தார். எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே மாடு மேய்த்துக்கொண்டியிருந்த 5 பேர்களை சீன ராணுவம் பிடித்து சென்றது பற்றி குறிப்பிட்ட அந்தோணி, அந்த 5 பேர் ராணுவத்தினர் அல்ல. சிவிலியன்காளவர். அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வுகாணப்பட்டது என்றார். எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதுதான் நமது முடிவாகும். நீண்டதூரம் உள்ள எல்லைப்பகுதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து பேசி தீர்வுகாணப்படும் என்றார். இருநாடுகளிடையே உள்ள எல்லைப்பிரச்சினையை தீர்க்க நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அந்தோணி, பேச்சுவார்த்தையில் எல்லோரும் அதிசயத்தக்க வைகையில் எதுவும் நடந்து விடாது. பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் திருப்தி அடையும்படி முடிவு ஏற்படும் வரை எல்லைப்பகுதியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை இருதரப்பினரும் பேசி சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இந்தியா_சீனா இடையே சமீபத்தில் எல்லைப்பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் எல்லையில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண முடிகிறது. இதுதான் இரண்டு நாடுகளிடையே உள்ள எல்லைப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் என்று அந்தோணி மேலும் கூறினார். 

கடந்த 1971_ம் ஆண்டு இந்தியா_பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்றது. 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரண் அடைந்தனர். அந்த வெற்றிதினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 16_ம் தேதி விஜய் திவாஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நேற்று விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்பட்டது. மறைந்த இந்திய ராணுவ வீரர்கள் சமாதியில் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்