முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகளை விசாரிக்க அனுமதி தேவையில்லை

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 18 - மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் விவரங்களை தெரிவித்து வருகிறது. 

இந்த முறைகேட்டால் சுரங்கத்துறை இணை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவ தாக சி.பி.ஐ. வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டார். 

இதையடுத்து இந்த வழக்கில் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. வழக்கை கோர்ட்டு கண்காணிப்பதால் கோர்ட்டு 

உத்தரவே போதுமானது என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. 

மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே உயர் அதிகாரிகளிடம் விசாரிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்