முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ராணுவ மந்திரியுடன் நேச்சல் சந்திப்பு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு,டிச.22 - இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல், இலங்கை ராணுவ மந்திரியும், ராஜபக் சேயின் தம்பியுமான கோத்பய ராஜபக் சேயை ந்தித்துப் பேசினார். நேச்சல் நேற்று திடீரென கொழுப்பு சென்றார். அங்கு முத்தரப்பு கடல்கள் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது. இதில் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடலோர பாதுகாபபுப் படை அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். 

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதிநிதி நேச்சல் சந்து இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இவர் இலங்கை ராணுவ மந்திரியும், ராஜபக் சேயின் தம்பியுமான கோத்பய ராஜபக் சேயை சந்தித்துப் பேசினார். கொழும்பில் உள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்ச கத்தில் இந்த சந்கிப்பு நடைபெற்றது. அப் போது இலங்கைக்கான இந்தியத் தூதர் யஷ்வந்த் குமார் உடனிருந்தார். 

இந்த சந்திப்பு பற்றிய விவரம் வெளியிடப் படவில்லை. இரு நாட்டு நலகள் பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் கோத்தபய ராஜபக்சே ரகசியமாக டெல்லி வந்து சென்றார், அப்போது அவர் சிவசங்கர்மேனன் உள்பபட பலரை சந்தித்துப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony