முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5_வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இலங்கைக்கு வெற்றி

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

அபுதாபி, டிச. 29 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற 5_வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 3_ 2 என்ற கணக்கில் முடிந்தது. பாக். அணி ஏற்கனவே தொடரை வென்றது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5_வது ஒரு நாள் போட்டி நேற்று முன் தினம் அபுதாபியில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில்  முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 232 ரன் களுக்கு ஆல் அவுட் ஆனது. 

பாக். அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார். தவிர, அன்வர் அலி 41 ரன்னையும், மொகமது ஹபீஸ் 41 ரன்னையும், உமர் அக்மல் 20 ரன்னையும், ஷர்ஜில்கான் 18 ரன்னையும், ஷெஜாத் 17 ரன்னையும், உமர்குல் 8 ரன்னையும், அஜ்மல் 8 ரன்னையும், மசூத் 7 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா 4 விக்கெட் கைப்பற்றினார். தவிர, லக்மல் 3 விக்கெட்டும், மென்டிஸ், மேத்யூஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இலங்கை அணி வெற்றி பெற 233 ரன்னை இலக்காக பாக். அணி நிர்ணயித்தது. அந்த அணி 49.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 235 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கை அணி தரப்பில், சண்டிமால் அதிகபட்சமாக 64 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர கவுசல் பெரேரா 47 ரன்னையும், தில்ஷான் 45 ரன்னையும், சங்கக்கரா 22 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி ஏற்கனவே 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் அந்த அணி தொடரை 3 _ 2 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. 

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருது இலங்கை வீரர் சண்டிமாலுக்கும், தொடர் நாயகன் விருது பாக். வீரர் மொகமது ஹபீசிற்கும் அளிக்கப்பட்டது. 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த ஒரு நாள் தொடர் பொது மைதானமான சார்ஜா மற்றும் அபுதாபியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்